40 மணி நேரம் வரை அணையாமல் எரியும் அகல் விளக்கு : மண்பாண்ட கலைஞருக்கு குவியும் ஆர்டர்கள்

6 November 2020, 5:19 pm
Earthern Lamp - Updatenews360
Quick Share

சத்தீஸ்கர் : எந்நேரமும் எறியும் அகல் விளக்குகளை மண் பாண்ட கலைஞர் உருவாக்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகயோன் கிராமத்தை சேர்ந்த அசோக் சக்ரதாரி என்பவர் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறார். தற்போது இவர் 24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை இடைவிடாமல் எரியும் அகல் விளக்கை உருவாக்கியுள்ளார்.

எண்ணெய் குறையும் போது, விளக்கின் மேற்பகுதியில் இருக்கும் குடுவையில் இருந்து எண்ணெய் தானாகவே சிறிது சிறிதாக முன்பக்கம் இருக்கும் குழாய் போன்ற அமைப்பு மூலம் இறங்கும் வகையில் இந்த விளக்கை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், மண் பாண்ட கலைஞர் அசோக் சக்ரதாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இதைப்பாத்து பலர் அகல் விளக்குகளை ஆர்டர் செய்து வருகின்றனர்.

Views: - 40

1

0