பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வு.. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 9:08 pm
GST - Updatenews360
Quick Share

பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வு.. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு..!!

2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,68,337 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகம். இதற்கு உள்நாட்டு பரிவர்த்தனை பெருமளவு ஊக்கமளித்துள்ளது என தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.18.40 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வசூலை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல், நடப்பு நிதியாண்டின் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்தது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஜி.எஸ்.டி. 13.9 சதவீதம் அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி.யில் 8.5 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூல் உயர்ந்துள்ளது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 83

0

0