இந்தியாவில் கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்

19 August 2020, 9:31 am
Quick Share

அடுத்த 5 ஆண்டுகளில் நாடு மழுவதும் கேன்சர் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுளாக கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் இனிவரும் 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது, 1.30 மில்லியன் மக்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதன் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 27.1 சதவீதத்தினருக்கு புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவற்றின் பயன்பாட்டால் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.சி.எம்.ஆர் அதற்கு அடுத்தபடியாக இரைப்பை மற்றும் மார்பக புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஆண்களும், ஏழு லட்சத்திற்கும் அதிகமான பெண்களும் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இது குறித்து மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை என தெரிவித்துள்ள ஐ.எம்.சி.ஆர், கேன்சர் புற்று நோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Views: - 34

0

0