லடாக் எல்லையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய வீரர்கள்..!

15 August 2020, 11:22 am
Quick Share

நாடு முழுவதும் இன்று 74வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் இன்று காலை சுதந்திர கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சுதந்திர தினம் என்றால் அதில் முக்கிய பங்கு வகுப்பவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் தான். நாட்டின் மீதான தங்கள் அதீத பற்றை உயிருக்கும் மேலாக மதிக்கும் அவர்களுக்கு சுதந்திர தினம்தான் மிக முக்கியமான விழா. அந்த வகையில், இன்று ராணுவ வீரர்கள் தங்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல், இந்திய-சீன எல்லையான லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், சுதந்திர கொடியை கையில் ஏந்தியவாறு பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை ஒலித்தவாறு வரிசையாக சென்றனர்.

பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சுதந்திர தின வாழ்த்துக்களை பகிந்துகொண்டனர். தங்கள் அயராத பணியின் இடையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய ராணுவ வீரர்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

கொடியை கையில் ஏந்தியவாறு அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்போருக்கு தாய் நாட்டின் மீதான உணர்வு பூர்வ பற்றை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

Views: - 42

0

0