“எல்லைப் பாதுகாப்பில் யாருக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது”..! மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் உரை..!

17 September 2020, 1:04 pm
Rajnath_Singh_Rajya_Sabha_Updatenews360
Quick Share

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் சீனாவுடனான இந்தியாவின் எல்லை நிலைப்பாடு குறித்து பேசினார். இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், எல்லையின் பாரம்பரிய சீரமைப்பை சீனா ஏற்கவில்லை என்றும் ராஜ்நாத் சிங் அப்போது தெரிவித்தார்.

“எல்லை பிரச்சினை மிகவும் சிக்கலானது. பொறுமையாக தீர்க்கப்பட வேண்டும். இரு நாடுகளும் அதை நம்புகின்றன.” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். “பொதுவாக சீன எல்லையில் வரையறுக்கப்பட்ட உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு எதுவும் இல்லை.” என்று அவர் கூறினார்.

இந்தியா-சீனா எல்லையில் தற்போதைய நிலைமை குறித்து பேசிய சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின்படி அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களின் நடவடிக்கைகளுக்கு லடாக் செக்டரில் சீன இராணுவம் தடைகளை உருவாக்கியது என்றார். சீனப் படையினருக்கு இந்திய படைகள் பொருத்தமான பதிலை அளித்தன என்று அவர் மேலும் கூறினார்.

“நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்கான நம் படையினரின் உறுதியைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்கக்கூடாது.” என்று அவர் கூறினார்.

இந்தியாவும் சீனாவும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் பொதுவான புரிதல்களையும் சிங் பட்டியலிட்டார். “ஆனால் 2003’க்குப் பிறகு, இந்த ஒப்பந்தங்களை மதிக்கும் விருப்பத்தை சீனா காட்டவில்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜூன் 15’ம் தேதி சீன வீரர்களுடன் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட 20 வீரர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவத்தில் சீன ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் என்றும் சிங் கூறினார்.

முன்னதாக நாடாளுமன்றத்தின் பருவமழை அமர்வின் இரண்டாவது நாளான செவ்வாயன்று மக்களவையிலும் பாதுகாப்பு அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அங்கு எல்லையில் பதற்றம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறினார்.

இந்தியா-சீனா எல்லை பதற்றம் தொடர்பாக எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார்.

Views: - 5

0

0