மூன்றாவது நாளாக தொடரும் பிரிகேடியர் லெவல் பேச்சுவார்த்தை..! இந்திய சீன மோதல் முடிவுக்கு வருமா..?

2 September 2020, 1:16 pm
india_china_ladakh_front_updatenews360
Quick Share

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பக்கத்தில் சுஷூலில் இந்தியாவும் சீனாவும் மூன்றாவது சுற்று பிரிகேடியர்-லெவல் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. சீன ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்திய பாதுகாப்புப் படைகள் மீண்டும் தோல்வியுறச் செய்த ஒரு நாள் கழித்து இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியது.

திங்களன்று, இந்திய இராணுவம் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு பாங்கோங் ஏரியின் தென் கரையில் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற சீனா மேற்கொண்டும் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கையை இந்தியா தகர்த்தது. இதையடுத்து இரு தரப்பினரும் திங்களன்று சுமார் ஆறு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மோதலை இறுதி செய்வதில் உறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கை காரணமாக ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான இந்த முயற்சிகளை இந்திய தரப்பால் தடுக்க முடிந்தது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார். மேலும் இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தங்கள் வீரர்களை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் சீனாவிடம் அவர் கேட்டுக்கொண்டார். .

தென் கரையோரப் பகுதியில் நிலையை மாற்றும் முயற்சியில் ஆகஸ்ட் 29 நள்ளிரவு மற்றும் ஆகஸ்ட் 30’ஆம் தேதி சீன தரப்பு முன்னர் ஒப்புக் கொண்ட புரிந்துணர்வை மீறி ஆத்திரமூட்டும் இராணுவ சூழ்ச்சிகளில் ஈடுபட்டது என்றார். ஒரு புதிய மோதலில் நீண்டகால எல்லை நிலைப்பாட்டில் ஒரு புதிய முன்னணியைத் திறக்க சீனாவின் முயற்சியாகக் காணப்பட்ட இது இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க கிழக்கு லடாக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய இரண்டு மணி நேர கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தலைவர் ஜெனரல் நாரவனே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0