அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவது ஆபத்து..! இந்தியா, சீனா ஒருமித்த குரலில் கருத்து..!

15 April 2021, 6:38 pm
Quick Share

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் திரும்பப் பெறுவதன் மூலம் உருவாகும் வெற்றிடத்தில் இடையூறு செய்பவர்கள் மீண்டும் அடியெடுத்து வைப்பார்கள் என்று இந்திய பாதுகாப்புப்படை தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெறுவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சி.டி.எஸ் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போது இந்த அறிக்கையை வழங்கினார். ஆனால் இடையூறாக செயல்படக்கூடிய நபர்கள் மற்றும் நாடுகளின் பெயரை வெளிப்படையாகக் கூற மறுத்துவிட்டார்.

மே 1 முதல் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

“பிராந்திய நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது மற்றும் நாட்டில் ஒரு தலிபான் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மிகுந்த கவலைகள் இருக்கும்.” என அமெரிக்க ஜனாதிபதியின் துணை உதவியாளராகவும், 2017 முதல் 2021 வரை தென் மற்றும் மத்திய ஆசியாவின் தேசிய இயக்குநராக முந்தைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இருந்த லிசா கர்டிஸ் தெரிவித்துள்ளார்.

1990’களின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்படுத்தியபோது, ​​பல்வேறு போராளிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரையும் அங்கு வரவேற்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

“லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகள், 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் போன்ற இந்தியாவில் நடவடிக்கைகளுக்காக ஆப்கானில் பயிற்சி பெற்றவர்கள்.” என்று கர்டிஸ் மேலும் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று அறிவிக்கப்படாத திடீர் ஆப்கான் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள 2,500 அமெரிக்க வீரர்கள் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களின் 20’வது ஆண்டு நினைவு தினத்திற்குள் நாடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த ஒரு நாள் கழித்து, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா மற்றும் இதர தலைவர்களை பிளிங்கன் சந்தித்தார்.

இந்தியாவைத் தவிர, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதப் படைகள் குழப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவதை தடுக்க பிராந்திய நாடுகளின் நியாயமான பாதுகாப்புக் கவலைகளுக்கு அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்று சீனாவும் இந்தியாவுடன் சேர்ந்து கவலை தெரிவித்துள்ளது இதில் ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சீனாவைப் பொறுத்தவரை ஆப்கான் தலிபான்கள் கையில் சென்றால் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லீம் விவகாரணத்தில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அமெரிக்க படை விலகலை கவலையுடன் பார்ப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 21

0

0