இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

19 August 2020, 11:04 am
Quick Share

கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் செயல்பாட்டுக்கு வராத சூழலில் அதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கவே உலக நாடுகள் அனைத்தும் முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,02,742 லிருந்து 27,67,273 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒரே நாளில் 64,531 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 19.77 லட்சத்தில் இருந்து 20.37 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 51,797 லிருந்து 52,889 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 42

0

0