இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

17 August 2020, 10:08 am
Quick Share

கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் செயல்பாட்டுக்கு வராத சூழலில் அதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கவே உலக நாடுகள் அனைத்தும் முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 57,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 941 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகள் மூலம் தொற்று பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதோடு, உயிரிழப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுவரை 3,00,41,400 கொரானா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 7,31,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Views: - 66

0

0