17.50 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தரும் கொரோனா..! பலி எண்ணிக்கையும் உயர்வு
2 August 2020, 10:44 amடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 17, 50,724 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று மற்ற நாடுகளை காட்டிலும் மின்னல் வேகத்தில் இருக்கிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.
கொரோனா தொடர்பான பரிசோதனைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியாவில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந் நிலையில் இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17,50,724 ஆக அதிகரித்து உள்ளது. 24 மணி நேரத்தில் புதியதாக 54,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 853 பேர் பலியாகி உள்ளனர்.
ஒட்டு மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 37,364 ஆக பதிவாகி உள்ளது. கொரோனா பாதிப்புடன் 5,67,730 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். 11,45,630 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.