20 லட்சத்தைக் கடந்த பாதிப்புகள்..! கொரோனா தொற்றில் புதிய உச்சம்..! எப்போது வரும் வசந்த காலம்..?

6 August 2020, 11:12 pm
coronavirus_updatenews360
Quick Share

இந்தியா இன்று மாலை 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 20,06,760 கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் உலக அளவில் 28 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புக்களைக் கொண்ட பிரேசிலுக்குப் பின்னால் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. மேலும் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள உஅமெரிக்கா 50 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளைக் கொண்டுள்ளன.

ஜூலை 28 அன்று, இந்தியாவில் 15 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகிஇருந்தன. இந்நிலையில் புதிய 5,00,000 பாதிப்புகள் ஒன்பது நாட்களில் வந்தன,. ஒவ்வொரு நாளும் சராசரியாக 50,000 புதிய பாதிப்புகள் இந்த கால கட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக இன்று காலை, சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் இந்தியா 56,000’க்கும் அதிகமான பாதிப்புக்களைச் சேர்த்துள்ளதாகக் காட்டியது. இதன் மூலம் இன்று காலை கொரோனா பாதிப்பு மொத்தம் 19.65 லட்சமாக இருந்தது. இதற்கிடையே இதுவரை மொத்தம் 13.28 லட்சம் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 40,000’க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்த ஐந்து மாநிலங்களாக உள்ளன. இதில் 4.6 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

தேசிய தலைநகரான டெல்லியில் இன்று 1,299 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லியின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1.41 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை 4,059 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தினமும்  50,000’த்தைக் கடக்கும் இதே நிலை நீடித்தால், அடுத்த 15 நாட்களில் இந்தியா, பிரேசிலை விஞ்சி இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்துவிடும் என சுகாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Views: - 6

0

0