உலகளாவிய கண்டுபிடிப்பு தரவரிசை..! முதல் முறையாக 50 இடங்களுக்குள் நுழைந்தது இந்தியா..!

4 September 2020, 12:53 pm
innovation_india_updatenews360
Quick Share

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் முதல் 50 நாடுகளில் இந்தியா முதன்முறையாக இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இந்தியா 48’வது இடத்தைப் பிடித்தது. மேலும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை (ஜிஐஐ) பட்டியலை உலக அறிவுசார் சொத்து அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் ஐஎன்எஸ்ஏடி பிசினஸ் ஸ்கூல் இணைந்து வெளியிட்டன. மொத்தம் 130’க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஆய்விற்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கண்டுபிடிப்பு தரவரிசையில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை முதலிடத்தில் உள்ளன. மேலும் முதல் 10 இடங்கள் அதிக வருமானம் கொண்ட நாடுகள் ஆக்கிரமித்து உள்ளன.  

தரவரிசைப்படி, பட்டியலில் முதலிடம் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்தாலும், ​​சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் புதுமையான கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால் படிப்படியாக கிழக்கு நோக்கிய மாற்றம் தொடர்கிறது.

முதல் 50 இடங்களை அடைவதற்கு இந்தியா சிறப்பாக செயல்பட்டாலும், புதுமையின் மையமாக மாற இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும்.

Views: - 6

0

0