பிரான்ஸ் விமானப்படையுடன் கூட்டுப் பயிற்சி..! இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
19 January 2021, 3:29 pmஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இருதரப்பு கூட்டு விமான போர் பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை மற்றும் பிரெஞ்சு விமான மற்றும் விண்வெளிப் படை முடிவெடுத்துள்ளன. இருதரப்பு விமானப் பயிற்சி ஜனவரி 21 முதல் ஜனவரி 24, 2021 வரை நடத்தப்படும்.
இருதரப்பு விமானப் பயிற்சியின் போது, பிரெஞ்சு தரப்பு ரஃபேல், ஏர்பஸ் ஏ -330 மல்டி-ரோல் டேங்கர் டிரான்ஸ்போர்ட், ஏ-400எம் போக்குவரத்து விமானம் மற்றும் சுமார் 175 வீரர்களை அனுப்ப உள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் பங்கேற்பில் மிராஜ் 2000, சு -30 எம்.கே.ஐ, ரஃபேல், ஐ.எல் -78 விமான எரிபொருள் நிரப்பும் விமானம், மற்றும் சில விமானங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு விமானப் படைகளுக்கிடையேயான தொடர்ச்சியான செயல்பாடுகளில் இந்த பயிற்சி ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இந்தோ-பிரெஞ்சு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை மற்றும் பிரெஞ்சு விமான மற்றும் விண்வெளி படை ஆகியவை கருடா என்ற பெயரில் விமானப் பயிற்சிகளின் ஆறு பதிப்புகளை நடத்தியுள்ளன. கடைசியாக 2019’ஆம் ஆண்டில் பிரான்சின் விமானப்படை தளமான மோன்ட்-டி-மார்சனில் இது நடந்துள்ளது.
தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக, இரு விமானப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன.
2018 ஆம் ஆண்டில் எக்ஸ் பிட்ச்ப்ளாக்கிற்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது பிரெஞ்சு விமான மற்றும் விண்வெளிப் படைகள் ஆக்ரா மற்றும் குவாலியரில் தரையிறங்கி இந்திய விமானப்படையுடன் சிறிய பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஃபேல் விமானத்தை இருபுறமும் களமிறக்குவதும், இரு பிரதான விமானப்படைகளுக்கிடையில் வளர்ந்து வரும் தொடர்பையும் குறிப்பிடுகையில் இந்த பயிற்சி மிகவும் தனித்துவமானதாக மாறியுள்ளது.
0
0