இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் 2வது அலை தாக்க வாய்ப்பு?….

19 October 2020, 11:49 am
inida winter corona- updatenews360
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவராக இருப்பவர் வி.கே.பால். இவர் நிதி ஆயோக்கின் உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் கடந்த 3 வாரமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் தொற்று பரவல் வலுவாக உள்ளது.

கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், 90 சதவீத மக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பில் உள்ளனர்.

இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட முடியாது. அது நடக்கக்கூடும். கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் பாதுகாத்து வைப்பதற்கு போதுமான குளிர்சேமிப்பு வசதிகள் இந்தியாவில் உள்ளன. மேலும் தேவைக்கேற்ப இந்த வசதியை அதிகரித்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி தயாராகி விட்டால் வினியோகம் செய்வதற்கும், மக்களுக்கு கிடைக்கச்செய்வதற்கும் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே இதுபற்றி எந்த கவலையும் தேவையில்லை என்று டுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

Views: - 38

0

0