13 நாடுகளுடன் விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை.? மத்திய அரசு மும்முரம்

18 August 2020, 10:14 pm
Air_India_Updatenews360
Quick Share

டெல்லி: 13 நாடுகளுடன் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறி உள்ளார்.

கொரோனா காரணமாக மார்ச் 23  முதல் இந்தியாவில் சர்வதேச மற்றும் உள் நாட்டு விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மே 25ம் தேதி மீண்டும் உள்நாட்டு விமான சேவை ஆரம்பமானது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் மிஷன் என்ற திட்டம் மூலம் மத்திய அரசானது இந்தியா அழைத்து வந்தது. அதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தொடங்கியது.

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந் நிலையில் 13 நாடுகளுடன் விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதில் ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தென்கொரியா, தாய்லாந்து நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Views: - 49

0

0