தடுப்பூசி, ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக தேசிய கொள்கை..! மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்..!

22 April 2021, 3:25 pm
supreme_court_updatenews360
Quick Share

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ள நிலையில், ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசிய கொள்கையை அறிவிப்பது குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஊரடங்கை அறிவிப்பதில் உயர்நீதிமன்றங்களின் நீதி அதிகாரத்தையும் ஆராயும் என்று கூறினார். கொரோனா தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆறு வெவ்வேறு உயர்நீதிமன்றங்கள் கேட்டது ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

கொரோனா மேலாண்மை தொடர்பான சூ மோட்டோ வழக்கில் உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவை சட்ட விவகாரங்களில் உதவதற்காக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 புதிய கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பு ஆகும். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,59,30,965’ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 15 முதல், இந்தியா தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை 2,95,041, ஏப்ரல் 20 அன்று 2,59,170, ஏப்ரல் 19 அன்று 2,73,510, ஏப்ரல் 18 அன்று 2,61,500, ஏப்ரல் 17 அன்று 2,34,692, ஏப்ரல் 16 அன்று 2,17,353, ஏப்ரல் 15 அன்று 2,17,353 பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், வைரஸ் காரணமாக 2,104 பேர் நேற்று இறந்தனர். இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 1,84,657’ஆக உயர்த்தியுள்ளது. ஒரே நாளில் நாடு 2,000’க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்திருப்பது இது தொடர்ந்து இரண்டாவது நாளாகும். புதன்கிழமை, 2,023 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நேற்று ஒரு நாளில் மொத்தம் 22,11,334 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் மொத்த தடுப்பூசி எண்ணிக்கையை 13,23,30,644’ஆக உயர்த்தியுள்ளது.

Views: - 253

0

0