தொடர்ந்து எட்டாவது நாளாக 50000த்துக்கும் கீழ்..! குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்..!

15 November 2020, 5:27 pm
Corona_Delhi_UpdateNews360
Quick Share

தொடர்ந்து எட்டாவது நாளாக இந்தியாவில் 50,000’க்கும் குறைவான புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இது பரவலான முக்கியத்துவத்தை பெறுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக மொத்தம் 41,100 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் 42,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 447 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 4,79,216 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த கொரோனா தொற்றுக்களில் வெறும் 5.44 சதவிகிதம் மட்டுமேயாகும்.

கடைசியாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000 எனும் வரம்பைத் தாண்டியது நவம்பர் 7 அன்று தான். அதன் பிறகு தற்போது வரை 50,க்கும் கீழேயே கொரோனா தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியனுக்கு 6,387 பாதிப்புகள் எனும் தேசிய சராசரியை விட பதினைந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்கள் குறைவாக உள்ளன.

ஒவ்வொரு 24 மணி நேர சுழற்சியிலும் புதிய பாதிப்புகளை விட புதிய மீட்டெடுப்புகள் அதிகரித்து வருவதால் மீட்பு வீதம் 93.09 சதவீதமாக மேம்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகள் 82,05,728’ஆக உள்ளன.

மீட்கப்பட்ட புதிய தொற்றுகளில் 79.91 சதவீதம் பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Views: - 25

0

0

1 thought on “தொடர்ந்து எட்டாவது நாளாக 50000த்துக்கும் கீழ்..! குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்..!

Comments are closed.