ஷாக்..! கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம்..! பிரேசிலை முந்தியது இந்தியா..!

7 September 2020, 10:39 am
Corona_India_Second_Place_UpdateNews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இந்தியா இப்போது தொற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக மாறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு மிக உயர்ந்த ஒற்றை நாள் பாதிப்புகளாக 90,802 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்களை பதிவு செய்து உலக சாதனை படைத்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட நிலையில், நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 42,04,614 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்புகளில், 32,50,428 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பால் 8,82,542 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் வைரஸ் தொற்றால் இறந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை நாட்டில் 71,642 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 90,802 புதிய பாதிப்புகள் மற்றும் 1,016 மரணங்கள் பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,04,614’ஆக உள்ளது. இதில் 8,82,542 பாதிப்புகள் செயலில் உள்ளன. 32,50,429 குணமாகி வெளியேற்றப்பட்டுள்ளனர். 71,642 பேர் இறந்துள்ளனர்.” என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 9

0

0