விரைவாக எதிர்வினையாற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..! டிஆர்டிஓ அசத்தல்..!

13 November 2020, 7:46 pm
India_testfires_QRSAM_UpdateNews360
Quick Share

விரைவாக எதிர்வினையாற்றும் தரையிலிருந்து ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை (கியூஆர்சாம்) வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு பாலசூர் விமான சோதனை வரம்பிலிருந்து சோதிக்கப்பட்டது. சோதனையின் போது ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாக தாக்கியது.

கியூஆர்சாம், ஒரு சிறிய ஆயுத அமைப்பாகும். இது ரேடர்களை உள்ளடக்கியது. மேலும் 360 டிகிரி கவரேஜை உள்ளடக்கியது. இதன் மூலம் எந்த திசையிலிருந்து வந்தாலும் துல்லியமாக எதிர்த்துத் சென்று தாக்கி அழிக்கும்.

டிஆர்டிஓ படி, ஏவுகணை அமைப்பு நகரும் கவச விமானங்களை வான்வழி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முழு ஆயுத அமைப்பும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவப்படும் வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய வான் பாதுகாப்பு மேலும் வலுவாகியுள்ளது.

கடந்த வாரம், பினாகா மல்டி-பீப்பல் ராக்கெட் அமைப்பின் (எம்ஆர்எல்எஸ்) மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெற்றிகரமாக விமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டிஆர்டிஓவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இது, 60 முதல் 90 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் நடுப்பகுதியில் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் எந்தவொரு மோசமான எதிர்வினையையும் சமாளிக்க இந்தியா தொடர்ந்து பல ஏவுகணைகளை சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது

Views: - 32

0

0