ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.., 24 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்..!

29 August 2020, 9:54 am
Quick Share

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷஅமீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜடூரா பகுதியில் தீவிரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், கடந்த 24 மணி நேரமாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் இரவு, பகலாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதன் அடிப்படையில் இன்று அதிகாலை 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் நேற்று முதல் இன்று காலை வரை தொடர்ந்த தேடுதல் வேட்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட அதிகாரி, தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

Views: - 33

0

0