அருணாச்சலில் எல்லை கிராம மக்கள் வெளியேற்றம்..? ஊடக அறிக்கைகளை மறுத்த இந்திய ராணுவம்..!

10 September 2020, 2:48 pm
Line_of_Actual_Control_UpdateNews360
Quick Share

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உள்ள மக்மஹோன் கோட்டிற்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறிய ஊடக அறிக்கையை இந்திய ராணுவம் நிராகரித்தது.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஐந்து இந்தியர்களை கடத்தியதால் சில தினங்களாக சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் சீன எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்கள் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த அறிக்கையை தீங்கிழைக்கும் நடவடிக்கை என்று அழைத்த தேஜ்பூரின் மக்கள் தொடர்பு அலுவலர், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மக்கள் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைத்தார்.

“எல்லையின் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறும் செய்தி போலியானது மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கை ஆகும். அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமின் பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும் அதை மறு ட்வீட் செய்வதற்கு முன்னர் அனைத்து செய்திகளையும் அதிகாரிகளிடம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று தேஸ்பூரின் பாதுகாப்புத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ட்வீட் செய்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உள்ள மக்மஹோன் கோட்டிற்கு அருகிலுள்ள கிராமவாசிகள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டத்தின் மத்தியில் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

Views: - 5

0

0