சிக்கிமில் சிக்கித் தவித்த சீன நாட்டினருக்கு உதவி..! மனித நேயத்தை வெளிக்காட்டிய இந்திய ராணுவம்..!

5 September 2020, 5:49 pm
indian_Army_helps_Chinese_UpdateNews360
Quick Share

இந்தியாவும் சீனாவும் கடுமையான எல்லை தகராறில் இருந்தாலும், வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17,500 அடி உயரத்தில் தங்கள் வழியை தவற விட்டு இந்திய பகுதிக்குள் அல்லாடிய ஒரு பெண் உட்பட மூன்று சீன நாட்டினரை இந்திய ராணுவம் மீட்டது.

இந்தியாவும் சீனாவும் கடந்த மே மாதம் லடாக்கில் மோதல் ஆரம்பித்தலிலிருந்தே எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜூன் மாதம் இரு தரப்பிலும் வீரர்கள் இறந்ததை அடுத்து, நிலைமை மிக மோசமடைந்தது. 

பின்னர் சில தினங்களுக்கு முன்பு எல்லையில், பாங்கோங் ஏரியை ஒட்டிய பகுதிகளில் நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மாற்ற முயன்ற நிலையில், அதிரடியாக செயல்பட்ட இந்தியா, சீனாவை துரத்தி அடித்து மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாங்கோங் ஏரியின் தென்கரையில் அமைந்துள்ள உயரமான பகுதியைக் கைப்பற்றியது.  

இது ஒரு பக்கம் இருந்தாலும், எதிரி நாட்டினரே ஆனாலும் ஆபத்தில் சிக்கியுள்ள சமயத்தில் உதவிக்கரம் கொடுத்து மீட்கும் மனித நேயத்தை இந்திய ராணுவம் ஒரு போதும் கைவிட்டதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சிக்கிமில் நடந்துள்ளது. 

சிக்கிமில் சிக்கித் தவித்த சீன நாட்டினருக்கு இந்திய இராணுவ வீரர்கள், உதவிக்கரம் நீட்டியதோடு, மேலும் அந்தப் பகுதியின் கடுமையான காலநிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு உணவு மற்றும் சூடான ஆடைகளையும் வழங்கினர்.

“துணை பூஜ்ஜிய வெப்பநிலையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய சீன குடிமக்களின் உயிருக்கு உள்ள ஆபத்தை உணர்ந்த இந்திய இராணுவத்தின் வீரர்கள் உடனடியாக வந்து ஆக்ஸிஜன், உணவு மற்றும் சூடான உடைகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கினர். தீவிர உயரம் மற்றும் கடுமையான காலநிலை மாறுபாடுகள் காரணமாக அவர்கள் வழி தவறியுள்ளனர்.” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவம் ட்விட்டரில் பகிர்ந்த படங்கள், படையினர் மூன்று பேருக்கு உதவுவதையும், அவர்களுக்கு உணவு வழங்குவதையும், அவர்களின் காரை சரிசெய்வதையும் காட்டுகின்றன. வீரர்கள் சீன நாட்டினரை தங்கள் இலக்கை அடைய வழிகாட்டி, பின்னர் திரும்பிச் சென்றனர்.

சீன குடிமக்கள் தங்களுக்கு உடனடியாக உதவிய இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Views: - 0

0

0