இந்திய ஹாக்கி ஜாம்பவான் சரண்ஜித் சிங் மாரடைப்பால் காலமானார்: பல்வேறு தரப்பினர் இரங்கல்!!

Author: Rajesh
27 January 2022, 5:45 pm
Quick Share

சிம்லா: இந்திய ஹாக்கி ஜாம்பவான் சரண்ஜித் சிங் மாரடைப்பால் காலமானார்.

இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் சரண்ஜித் சிங். இமாச்சலபிரதேச மாநில உனா மாவட்டத்தில் 1930 நவம்பர் 22ம் தேதி சரண்ஜித் சிங் பிறந்தார். 1964ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக சரண்ஜித் சிங் செயல்பட்டார். அதேபோல், 1960ம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் சரண்ஜித் சிங் இடம்பெற்றிருந்தார். ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சரண்ஜித் சிங் சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், 90 வயதான சரண்ஜித் சிங் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இமாச்சலபிரதேசம் உனாவில் உள்ள தனது வீட்டில் சரண்ஜித் சிங் உயிரிழந்தார். நீண்டகால உடல்நலக்குறைவு, வயது முதிர்வு மற்றும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சரண்ஜித் சிங் இன்று மரணமடைந்தார்.

சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 1640

0

0