“உலகை இந்தியா வழிநடத்த வேண்டும்” – பிரதமர் மோடி சூளுரை..!

15 August 2020, 9:40 am
Quick Share

டெல்லி செங்கோட்டையில் பிரமர் மோடி தேசிய கொடி ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற 74வது வருடம் இன்று பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரமத் மோடி தேசிய கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் உரையாற்றிய அவர் :-

சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்கும் நேரம் இது.

இத்தருணத்தில் கொரோனா முன் களப்பணியாளர்களை நினைவில் கொள்ள வேண்டும், அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநில அரசுகளுடன் இணைந்து போராடி வருகின்றோம், கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயமாக நாம் வெல்வோம்.

சுயசார்பு இந்தியாவை நோக்கி நாடு சென்றுகொண்டு இருக்கிறது.

இந்தியா தன்னிறைவு பெற்றால் தான் பிற நாடுகளுக்கு உதவ முடியும்.

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

உலகை இந்தியா வழிநடத்த வேண்டும்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம்.

கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுள்ளது.

புதிய கல்வி கொள்கை மூலம் இந்திய மாணவர்கள் உலக குடிமக்களாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விவசாய தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நாட்டின் எந்த ஒரு பகுதியும் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

முப்படைகளிலும் நிரந்தரமாக பணியாற்றும் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜன்தன் திட்டத்தின் கீழ் 22 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன, அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது.

இவ்வாறு தனது உரையில் பிரதமர் மோடி பேசினார்.

Views: - 39

0

0