ஐஎன்எஸ் வாகிர்..! உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்தாவது நீர்மூழ்கி போர்க் கப்பலின் சோதனை ஓட்டம் தொடக்கம்..!

12 November 2020, 12:37 pm
ins_vagir_updatenews360
Quick Share

இந்திய கடற்படைக்கு ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக், இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மேசகான் கப்பல் கட்டும் தளத்தில் புராஜெக்ட் 75’இன் ஐந்தாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பலான வாகீரின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

பிரெஞ்சு கடற்படை பாதுகாப்பு மற்றும் எரிசக்தி நிறுவனமான டி.சி.என்.எஸ் வடிவமைத்த ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒரு பகுதியாக வாகீர் உள்ளது. அவை இந்திய கடற்படையின் புராஜெக்ட் 75’இன் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகின்றன.

இந்திய கடற்படையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஆறு பொது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணியை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மேசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு (எம்.டி.எஸ்.எல்) வழங்கப்பட்டது. ஆறு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் முதலாவது கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரி 2015’இல் தொடங்கி, 2017’இன் பிற்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

ஐ.என்.எஸ் கல்வாரிக்குப் பிறகு, காந்தேரி, கரஞ்ச் மற்றும் வேலா ஆகியவை தொடங்கப்பட்டன.

ஐ.என்.எஸ் வாகிர் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு கடற்படை கட்டளைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஆர் பி பண்டிட், ஓராண்டு காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

கடற்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இரண்டு கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்களிடம் உள்ளன. மீதமுள்ள நான்கை மிக விரைவாக பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.” என்று வைஸ் அட்மிரல் ஆர் பி பண்டிட் கூறினார்.

நீர்மூழ்கிக் கப்பல்களின் ஸ்கார்பீன் ரகம் பொதுவாக எந்தவொரு நவீன நீர்மூழ்கிக் கப்பலினாலும் மேற்கொள்ளப்படும் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். மேற்பரப்பு எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆகியவை இதன் சிறப்பம்சமாகும்.

இது போக ஆறாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர் தொடக்க நிலையில் உள்ளது.

Views: - 33

0

0