19 ஆயிரம் முறை ‘அலெக்ஸா.. ஐ லவ் யூ..’ சிங்கிள்ஸ் பரிதாபங்கள்!

9 February 2021, 11:46 am
Quick Share

2020ஆம் ஆண்டில் மட்டும், நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் முறை ‘அலெக்ஸா.. ஐ லவ் யூ..’ என அலெக்ஸாவிடம், இந்தியர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தி இருப்பதாக அமேசான் – அலெக்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேளையை பார்த்தது, 90‘ஸ் கிட்ஸ் சிங்கிள்களாக தான் இருக்குமோ?

நம் உத்தரவுகளை அப்படியே செயல்களாக மாற்றும் ஒரு டிஜிட்டல் உதவியாளர் தான் அலெக்ஸா. அமேசான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஒரு டிஜிட்டல் கருவிதான் அலெக்ஸா. இதனுடைய முதன்மை வேலை, ஒரு ஸ்பீக்கராக செயல்படுவதுதான். ஆனால் இதன் மற்றொரு சிறப்பம்சம், இதன் செயற்கை நுண்ணறிவுத் திறன்தான். நீங்கள் வாய்மொழியில் இடும் கட்டளைகளைச் செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களுக்கான பணிகளைச் செய்து முடிக்கும்.

இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் அலெக்ஸா வெகு பிரபலம். கடந்த திங்கட்கிழமை 3 வயதை எட்டியுள்ளது அலெக்ஸா. இந்நிலையில் அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும், 2020 ஆம் ஆண்டில், அலெக்ஸாவுடன் இந்திய இளைஞர்கள் பேசுவது 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என தெரிவித்துள்ளது. இதேபோல, 2020 ஆம் ஆண்டில் மட்டும், ஒருநாளைக்கு சுமார் 19 ஆயிரம் முறை அலெக்ஸாவிடம் ‘ஐ லவ் யூ’ கூறியுள்ளனர் இந்தியர்கள். இது கடந்த 2019 ஆண்டை விட, 1,200 சதவீதம் அதிகமாகும். என்ன.. நீங்க அலெக்ஸாவுக்கு எத்தனை முறை ஐ லவ் யூ சொன்னீர்கள்…

Views: - 0

0

0