சுதந்திர தினத்தின் 75 ஆண்டு நிறைவைக் கொண்டாட மோடி தலைமையில் 259 பேர் கொண்ட குழு அமைப்பு..!

6 March 2021, 11:59 am
Modi_UpdateNews360
Quick Share

இந்தியாவின் 75’வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 259 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

குழுவின் உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, என்.எஸ்.ஏ அஜித் டோவல், 28 மாநில முதல்வர்கள், பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல ஆளுநர்கள் உள்ளனர்.

இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவேகவுடா ஆகியோரும் அடங்குவர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.

இந்த குழு 75’வது ஆண்டு நிறைவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் நினைவுகூருவதற்கான திட்டங்களை வகுப்பதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கும்.

மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாக்கிரகத்தின் 91’வது ஆண்டு விழாவான 2021 ஆகஸ்ட் 15’ஆம் தேதிக்கு 75 வாரங்களுக்கு முன்னர் 2021 மார்ச் 12’ஆம் தேதி கொண்டாட்டங்களை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குழுவின் முதல் கூட்டம் நாளை மறுநாள் மார்ச் 8’ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேசிய அமலாக்கக் குழு அமைப்பு :

முன்னதாக, 75 ஆண்டு நிறைவு சுதந்திர கொண்டாட்டங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஒரு தேசிய அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக செயலாளர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையின்படி, பல ஆண்டுகளாக வளர்ச்சி, ஆட்சி, தொழில்நுட்பம், சீர்திருத்தம், முன்னேற்றம் மற்றும் கொள்கை தொடர்பான பல திட்டங்கள் காண்பிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Views: - 5

0

0