எதிர்காலத் தேவை மற்றும் உலகத் தரத்தை பூர்த்தி செய்யும் புதிய கல்விக் கொள்கை..! துணைவேந்தர்கள் மாநாட்டில் மோடி உரை..!

14 April 2021, 1:27 pm
Modi_UpdateNews360
Quick Share

இந்தியாவின் புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்காலத்திற்கான தேவை மற்றும் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

“ஜனநாயகத்தின் தாயாக இருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. ஏனெனில் அதன் மதிப்புகள் நமது சமூக வாழ்க்கையில் பொதிந்துள்ளன” என்று மோடி இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் 95’வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசிய கருத்தரங்கில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் உரையாற்றினார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை (என்இபி) வெளியிட்டது. “தேசிய கல்வி கொள்கை எதிர்காலம் மற்றும் உலகளாவிய அளவுருக்கள் படி உருவாக்கப்பட்டுள்ளது” என மோடி கூறினார்.

‘ஆத்மனிர்பாரத்’ எனும் சுயசார்பு பாதையில் இந்தியா நடந்து செல்லும்போது திறமையான இளைஞர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.

“சுதந்திரத்திற்குப் பிறகு நமது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளார்” என்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் மோடி கூறினார்.

Views: - 33

0

0