கொரோனா தடுப்பூசி பயன்பாடு: சீரம் நிறுவனம் தீவிரம்…!!

30 November 2020, 11:09 am
covid_vaccine_updatenews360
Quick Share

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்துவதற்கு ‘சீரம்’ நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் உரிமத்தை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவல்லா நேற்று கூறியதாவது,

மத்திய அரசு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், 30 – 40 கோடி ‘டோஸ்’கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே, தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்துவதற்காக அனுமதி பெற இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0