சதத்திற்கு சண்டை போடும் அத்தியாவசியப் பொருட்கள் : சாமானியனின் கழுத்தை நெறிக்கும் தக்காளி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 October 2021, 5:59 pm
Tomato Price-Updatenews360
Quick Share

கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலையில் தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

இது கொரோனா காலம் என்றாலும் தொற்று குறைந்துள்ளதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில் தக்காளி விலை கழுத்தை நெருக்கியுள்ளது. ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலை உள்ளிட்ட எரிபொருள் விலை சாமானியர்கள் நசுக்கி வரும் நிலையில் தக்காளி விலை 3 மடங்கு மேல் உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் 15 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது 80 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில், தக்காளி சாகுபடி, அதிக அளவில் செய்யப்படுகிறது.

ஆனால், உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலமாக தக்காளி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆயினும், மழை காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் அவ்வபோது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், செடிகளிலேயே தக்காளி அழுகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

Views: - 122

0

0