சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப். 30ம் தேதி வரை நீட்டிப்பு: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
29 August 2021, 4:27 pm
Quick Share

புதுடெல்லி: சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமான போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது தொற்று பரவல் குறைந்து வந்தாலும் சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ஏா் பபுள் விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Views: - 261

0

0