இனி ரயில் பயணம் ஜாலிதான்: குறைந்த கட்டணத்தில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டிகள் அறிமுகம்!!

Author: Aarthi Sivakumar
29 August 2021, 12:20 pm
Quick Share

புதுடெல்லி: ரயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது.

ரயில்களில் புதிதாக 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. இந்த பெட்டிகளில் பயணிப்பதற்கு தற்போது வழக்கத்தில் உள்ள 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் வசூலிக்கப்படுகிற கட்டணத்தைவிட 8 சதவீதம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு குறைவான கட்டணத்தில் சிறப்பான பயண அனுபவத்தை தருவதற்காக இந்த மலிவு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த 3 அடுக்கு ஏ.சி. சொகுசு வகுப்பு பெட்டிகளில் 83 படுக்கை வசதிகள் இருக்கும்.

மேலும், இதில் 3 பக்கவாட்டு படுக்கைகள் இருக்கும். 806 புதிய ஏ.சி. 3 அடுக்கு சொகுசு வகுப்பு பெட்டிகள் இந்த நிதி ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

Views: - 254

0

0