இந்தியாவில் மதக்கலவரங்களைத் தூண்ட ஐஎஸ்ஐ சதி..! இண்டர்நெட் கால் மூலம் பின்னப்படும் சதி வலை..!

9 August 2020, 6:29 pm
VOIP_Call_UpdateNews360
Quick Share

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அமைதியான சூழ்நிலையை மாற்றி கலவரத்தை உண்டாக்குவதற்கும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ முயற்சி செய்வது அம்பலமாகியுள்ளது.

லக்னோவில் கலவரத்தைத் தூண்டுவது பற்றி பேசும் VOIP (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) அழைப்பை அரசு ஒட்டுக்கேட்டதில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் மற்றும் ஆஸ்திரேலியா எண்களுடன் இந்தVOIP அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் மக்களிடையே கலவரங்களைத் தூண்டுவதைப் பற்றி பேசுவது ஒட்டுகேட்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன், இந்த விவகாரத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோவில் மட்டுமல்லாது டெல்லியில் உள்ளவர்களுக்கும் சர்வதேச எண்ணிலிருந்து இதுபோன்ற அழைப்புகள் வந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தேசத்துரோகம், சதி, நாட்டின் அமைதியான சூழ்நிலையை கெடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு டஜன் எண்கள் காவல்துறையால் இடைமறிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பதிவுசெய்யப்பட்ட குறிப்புகள் விஐபி எண்கள் மூலம் மக்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எல்லா அழைப்புகளிலும் குரல் ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அழைப்பு பதிவுகளில், ஒரு நபர் ராமர் கோவில் பற்றி பேசுவதையும், ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை திட்டத்தை சீர்குலைப்பதையும் பேசுவது தெளிவாக உள்ளது.

இருப்பினும், இது போன்ற நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. முன்னதாக ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலின் பூமி பூஜை செய்த நாளில் ஐ.எஸ்.ஐ அயோத்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பு ரா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0