ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி டெல்லியில் கைது..! டெல்லியைத் தாக்க சதித்திட்டம் தீட்டியது அம்பலம்..!

22 August 2020, 10:20 am
Delhi_NSG_UpdateNews360
Quick Share

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழுவால், நேற்று பிற்பகல் டெல்லியின் தவுலா குவான் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கைது செய்யப்பட நபரிடம் இருந்து, மேம்படுத்தப்பட்ட இரண்டு ஐ.இ.டி. வெடி பொருட்களையும் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

டெல்லியில் வைத்து சிறப்பு காவல்படையால் கைது செய்யப்பட்ட நபர், உத்தரபிரதேசத்தில் வசிக்கும் அப்துல் யூசுப் கான் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தவுலா குவான் மற்றும் கரோல் பாக் இடையேயான ரிட்ஜ் பகுதியில் கானின் நடமாட்டம் பற்றிய தகவல்களை ஒரு போலீஸ் குழு பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ரகசியமாக அவரைக் கண்காணித்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

“போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக, அவர் வைத்திருந்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு ஐ.இ.டி. கைப்பற்றப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை பின்னர் பகிர்ந்து கொள்வோம்.” என்று துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் குஸ்வாஹா கூறினார்.