திருப்பதி கோவிலுக்கு 3 டன் காய்கறிகள் நன்கொடை: மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகிய இஸ்லாமியர்கள்..!!

22 January 2021, 3:02 pm
thirupathi vege - updatenews360
Quick Share

திருப்பதி: சித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமானோர் பணம், பொருளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

திருமலை தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறது. அந்த அறக்கட்டளைக்கு பல்வேறு தரப்பினர் காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில் சித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

”பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு வழங்குவதற்கு சமம். அதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி” என்று இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். திருப்பதி கோவிலுக்கு இஸ்லாமியர்கள் நன்கொடை வழங்கி இருப்பது மத நல்லிணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0