ஒரு பீட்சா…! ஒரு போன்..! ரூ. 95 ஆயிரம் ஸ்வாகா…! ஐடி ஊழியரிடம் நடந்த நூதன கொள்ளை

6 December 2019, 3:44 pm
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு பிட்சா ஆர்டர் பண்ணி 95 ஆயிரம் ரூபாயை ஐடி ஊழியர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோரமங்களா பகுதியில் வசிக்கும் தனியார் மென்பொருள் ஊழியர் ஒருவர் மொபைல் ஆப் மூலம் பிட்சா ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். சுவையான அந்த பீட்சை சாப்பிட ஆசையாய் அவர் காத்திருக்கிறார்.

ஆனால் ஒரு மணி நேரம் கடந்தும் பீட்சா வந்தபாடில்லை. என்ன எது என்று யோசித்த அவர், அந்த ஆன்லைன் பீட்சா நிறுவனத்துக்கு போன் செய்திருக்கிறார். அந்த தொலைபேசி எண்ணை இணையத்தில் தேடி கண்டுபிடித்திருக்கிறார்.

விசாரித்த போது, நீங்கள் அனுப்பிய பணம் வரவில்லை, ஆகையால் பிட்சா வராது, பணத்தை திருப்பி தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். நம்பிய இந்த ஐடி ஊழியருக்கு லிங்க் ஒன்றை போனில் பேசிய நபர் அனுப்பி இருக்கிறார். ங

அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுமாறும் கூறி இருக்கிறார். வெள்ளந்தியான இந்த நபரும், அவ்வாறே செய்திருக்கிறார். சில விநாடிகள் தான்.. வங்கி கணக்கில் இருந்து முதலில் 45 ஆயிரம் ரூபாய் ஸ்வாகா செய்யப்பட்டு இருக்கிறது.

என்ன என்து சுதாரிப்பதற்குள், மறுபடியும் 50 ஆயிரம் காணாமல் போயிருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த நபர் போலிசின் உதவியை நாடி இருக்கிறார்.

பீட்சா நிறுவனமோ, வாடிக்கையாளர் சேவை என்பது செல்போன் வழியே கிடையாது, இமெயில் வழியாக தான் என்று கையை விரித்திருக்கிறது. ஆக மொத்தம் ஒரு பீட்சா, ஒரு போன்… 95 ஆயிரத்தை இழந்திருக்கிறார் அந்த நபர்.