நடிகை- நடிகர்களுக்கு மட்டுமல்ல… நாங்க முதல்வருக்கும் கோவில் கட்டுவோம்..!!

6 August 2020, 3:40 pm
Quick Share

ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் சட்டமன்ற உறுப்பினர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் அருகே அந்தப் பகுதி எம்எல்ஏ வெங்கட்ராவ் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட முடிவு செய்து நேற்று பூமி பூஜை செய்து வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில மக்களுக்கு கேட்காமலேயே பல உதவிகளை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு கோவில் கட்டுவதாக எங்கள் தொகுதியில் உள்ள கோபாலபுரம் அருகே உள்ள ராஜம்பாளையம் பகுதியில் அடிக்கல் நாட்டப் பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கூடிய விரைவில் கோவில் எழுப்பப்படும் நடிகை நடிகர்களுக்கு மட்டுமல்ல மக்களைக் காக்கும் எங்கள் காவல் தெய்வம் முதல்வருக்கும் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது கோரிக்கைகளை தெரிவித்தார்.

Views: - 23

0

0