காஷ்மீரில் தீவிரவாதிகளை சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்… தீவிர தேடுதல் வேட்டை..!!

Author: Babu
24 July 2021, 11:37 am
Indian_Army_Anti_Terror_Ops_UpdateNews360
Quick Share

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பந்திப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்த நிலையில், ஷோக்பாபா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

இதை எதிர்பார்க்காத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் நடந்தது. இதில், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரியாத நிலையில், அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 174

0

0