ஜம்மு – காஷ்மீரில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கும் தீவிரவாதிகள்… டெல்லியில் பண்டிட்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
Author: Babu Lakshmanan9 October 2021, 8:10 pm
ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் பண்டிட்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் ஒடுக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. நாளொன்று 2 அல்லது 3 தீவிரவாதிகளாவது பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கு கொல்லப்பட்டு வருகின்றனர். அப்படி, கடந்த வாரத்தில் மட்டும் 7 தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்துக்கள், சீக்கியர்கள், பண்டிட்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீநகரின் பிரபல பிந்த்ரோ மெடிகேட் என்னும் மருந்து கடையின் உரிமையாளர் மக்காள் லால் பிந்த்ரே, பேர் பூரி விற்பனையாளர் மற்றும் ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மையின மக்களே ஆவர். இப்படி சிறுபான்மையினரை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்தும் தாக்குல் சம்பவம், அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினர் மீதான தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிட்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
காஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாதிகளின் அட்டகாசத்தை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
0
0