நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை..! மத்திய அரசு அறிவிப்பு..?

21 August 2020, 6:41 pm
Students_UpdateNews360
Quick Share

இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஆகியவை இனியும் ஒத்திவைக்கப்படாது என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் கரே இந்த முடிவை உறுதிப்படுத்தினார். “நீட் 2020 ஒத்திவைக்கப்படாது. உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெறவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நீட் மற்றும் ஜே.இ.இ (முதன்மை) தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நாடு முழுவதும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மையமாவது வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முந்தைய நாள் பாஜகவின் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியம் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நீட், ஜேஇஇ மெயின் 2020 தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் அவரை அணுகி, நீட், ஜே.இ.இ மெயின் 2020 ஒத்திவைக்க உதவிகோரியதை அடுத்து, கடிதம் எழுதியுள்ளதாக அவர் மேலும் ட்வீட் செய்துள்ளார். தீபாவளிக்கு பின்னர் தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 41

0

0