மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே தேர்வு..! ஜேஇஇ, நீட் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சர்..!

27 August 2020, 2:39 pm
Ramesh_Pokhriyal_Nishank_Updatenews360
Quick Share

கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஜே.இ.இ மெயின் மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்த கடுமையான விவாதங்களுக்கு மத்தியில், அமைதியான பெரும்பான்மையான மாணவர்கள் செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாக கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். 

“ஒவ்வொரு நாளும், நான் அமைதியான பெரும்பான்மையினரிடமிருந்து எண்ணற்ற மெயில்களைப் பெறுகிறேன். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பரீட்சைகளுக்குத் தயாராகி வருவதாகவும், அவர்கள் பூஜ்ஜிய கல்வியாண்டை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்கள்.

அவர்கள் ஜனவரி முதலாக மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பரீட்சைகளுக்கு கடுமையாக தயாராகி வருகின்றனர். அனைத்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வேண்டுகோள், தேர்வு மையங்களின் பாதுகாப்பு குறித்து எங்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.” என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 30 முதல் 60 நாட்களுக்குள் பரீட்சைகளை முன்னெடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, ​​தொற்றுநோய் முடிவு குறித்து எந்த உறுதியும் இல்லை என்று நிஷாங்க் கூறினார். எனவே முன்னெச்சரிக்கையுடன் முன்னேறுவதே தீர்வு என அவர் மேலும் கூறினார்.

மாணவர்களின் அவலநிலை குறித்து அரசாங்கம் சிந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டிய சில மாணவர்கள் மீதான கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், அவர்கள் மாணவர்களிடம் மிகுந்த பரிவுணர்வுடனும் அக்கறையுடனும் இருப்பதாக தெரிவித்தார். கல்வி ஆண்டு மிகவும் முக்கியமானது மற்றும் ஒரு பூஜ்ஜிய கல்வியாண்டு மாணவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் நேற்று சந்தித்து முந்தைய உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்தனர். இதற்கிடையே கல்வி அரசியல் மயமாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையானது என்று நிஷாங்க் கூறினார். மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் எனது சகாக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் கூறினார்.

“அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, ஜே.இ.இ.க்கு ஆஜரான 8.58 லட்சத்தில் மொத்தம் 7.41 லட்சம் வேட்பாளர்கள் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். 332 தேர்வர்கள் மட்டுமே தங்கள் மைய நகரங்களை மாற்றுமாறு கோரியுள்ளனர். அவை சாதகமாக கருதப்படுகின்றன. இதே போல் நீட் தேர்விற்கு, மொத்தம் 6.84 லட்சம் தேர்வர்கள் (மொத்தம் 15.97 லட்சத்தில்) முதல் ஐந்து மணி நேரத்தில் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.” என்று அவர் கூறினார்.

Views: - 0 View

0

0