நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைப்பா..? மத்திய கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

18 January 2021, 4:08 pm
Ramesh_Pokhriyal_UpdateNews360
Quick Share

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று கேந்திரியா வித்யாலயா மாணவர்களுடன் ஒரு நேரடி வெபினாரில் உரையாடியபோது மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அமைச்சரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வரவிருக்கும் பொதுத் தேர்வுகள் நடக்குமா என்பதும் ஒன்றாகும்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர், சிபிஎஸ்இ வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் மற்றும் பிற ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்று அமைச்சர் பதிலளித்தார். பாடத்திட்டத்தின் நீக்கப்பட்ட பகுதியிலிருந்து எந்த கேள்வியும் கேட்கப்படாது என மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

நேரடி உரையாடலில், மத்திய கல்வி அமைச்சர் கேந்திரியா வித்யாலயாக்கள் ஒரே கட்டமாக விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளுடன், பள்ளிகளில் ஆஃப்லைன் வகுப்புகளும் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

தொற்றுநோய்களுக்கு மத்தியில் 2021 பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு பயணிப்பது குறித்து ஒரு மாணவர் தனது கவலைகள் குறித்து கேட்டபோது, ​​மத்திய கல்வி அமைச்சர், மாணவர்கள் கொரோனாவுக்கு இடையில் தேர்வு மையங்களுக்கு பயணிப்பது குறித்த அச்சத்தை குறைக்க வேண்டும் என்றார். 

மேலும் 2020’ஆம் ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுகள் தொற்றுநோய்க்கு மத்தியில் நடத்தப்பட்டன மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளும் நாடு முழுவதும் வெற்றிகரமாக அரசாங்கத்தால் நடத்தப்பட்டன என்றும் கூறினார்.

கொரோனா நெருக்கடியை மன உறுதியுடன் எதிர்கொண்ட ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டிய அவர், சவால்களை வாய்ப்புகளாக மாற்றியதற்காக பாராட்டினார்.

மாணவர்களின் மன அழுத்தத்தை விடுவிப்பதற்கும், நீண்ட நேரம் வீட்டில் உட்கார்ந்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் மன ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும் தொடங்கப்பட்டுள்ள மனோதர்பன் தளத்தின் முக்கியத்துவத்தை அவர் மேலும் விளக்கினார்.

Views: - 9

0

0