ராணுவம் என்கவுண்டர்..! 3 பயங்கரவாதிகள் பலி..! 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

8 November 2020, 5:04 pm
Jammu_Kashmir_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தடுத்து, தாக்குதல் நடத்தி வந்த நிலையில்  மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ராணுவத் தரப்பில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 

“இரவு ஒரு மணிக்கு மச்சில் செக்டரில் எல்லைக்கோடு அருகே ரோந்து சென்றபோது அடையாளம் காணப்படாத நபர்களின் சந்தேகத்திற்கிடமான இயக்கம் கண்டறியப்பட்டது” என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா தெரிவித்தார்.  

நேற்று இரவு மச்சில் தொடங்கி செக்டரில் அடையாளம் தெரியாத நபர்களின் சந்தேகத்திற்கிடமான இயக்கம் கண்டறியப்பட்டதை அடுத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

மச்சில் செக்டரில் நடந்த என்கவுண்டரின் போது ஒரு கேப்டன் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் உயிர் இழந்தனர்.

பயங்கரவாதிகள் மூன்று பேரை வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படையினர் ஒரு ஏ.கே. துப்பாக்கி மற்றும் இரண்டு பைகளை அவர்களிடமிருந்து மீட்டது.

இதற்கிடையே தேடுதல் வேட்டை இன்னும் நடந்து கொண்டிருப்பதாக எல்லைக் காவல் படை அறிவித்துள்ளது.

Views: - 17

0

0