பத்திரிகையாளர் உட்பட நான்கு பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் கைது..! ஹத்ராஸ் சம்பவம் மூலம் வகுப்புவாத வன்முறைக்கு சதி..?

Author: Sekar
6 October 2020, 12:42 pm
hathras_PFI_Arrest_UpdateNews360
Quick Share

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) உடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு பத்திரியாகையாளர் உள்ளிட்ட நான்கு நபர்களையும், ஹத்ராஸ் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது கைது செய்துள்ளதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு நிதியுதவி செய்ததாக பி.எஃப்.ஐ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் உத்தரப்பிரதேச காவல்துறை இந்த அமைப்பிற்கு தடை கோரியது குறிப்பிடத்தக்கது.

ஹத்ராஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் செப்டம்பர் 14’ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 19 வயது தலித் பெண் இறந்ததைத் தொடர்ந்து, பெற்றோரின் அனுமதியின்றி இரவில் நடத்தப்பட்ட அவரது தகனம் ஒரு சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஹத்ராஸுக்குச் செல்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து நேற்று மதுராவில் உள்ள மத் டோல் பிளாசாவில் பி.எஃப்.ஐ இணைப்புகளைக் கொண்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நான்கு பேரும் ஒரு காரில் இருந்தனர். அவர்கள் முசாபர்நகரைச் சேர்ந்த அதிக்-உர் ரஹ்மான், மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக், பரைச்சைச் சேர்ந்த மசூத் அகமது மற்றும் ராம்பூரைச் சேர்ந்த ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து மொபைல் போன்கள், மடிக்கணினி மற்றும் அமைதி மற்றும் ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின்போது, ​​அவர்களுக்கு பி.எஃப்.ஐ மற்றும் அதன் இணை அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர். 

நேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமீபத்திய சம்பவங்களை குறிப்பிட்டு, அராஜகவாத சக்திகள் மாநிலத்தில் வகுப்புவாத மற்றும் சாதி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாகக் கூறிய சமயத்தில் இந்த கைதுகள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 50

0

0