புகைப்படங்களுக்கு உயிரூட்டிய ‘டேனிஷ் சித்திகி’ ஆப்கனில் சுட்டுக்கொலை : 13ம் உயிர்தப்பிய நிலையில் மற்றொரு தாக்குதலில் உயிரிழப்பு (வீடியோ)!!

16 July 2021, 5:46 pm
Danish_Siddhiqui - updatenews360
Quick Share

புகைப்படங்களால் மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வந்த பிரபல புகைப்பட கலைஞர் ‘டேனிஷ் சித்திகி ஆப்கனில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் டேனிஷ் சித்திகி. டெல்லி கலவரத்தில் துப்பாக்கி ஏந்தியவரின் புகைப்படம், கொரோனா ஊரடங்கில் புலம்பெயர்ந்தவர்களின் துயரம், தொற்றினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்த காட்சிகள் உள்பட பல்வேறு புகைப்படங்களினால் உலகிற்கு பரீட்சையமான நபராக வலம் வந்தார்.

இவரது புகைப்படங்களே சம்பவங்களின் மனநிலை மற்றும் உணர்வுகளை மக்களுக்கு தானாக கொண்டு சேர்க்கும் வகையில் இருக்கும். பத்திரிக்கையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்கா அரசு வழங்கும் புலிட்சர் விருதும், கடந்த 2018ம் ஆண்டு டேனியல் சித்திகிக்கு வழங்கப்பட்டது.

அப்படிபட்ட பிரபல புகைப்பட கலைஞரான இவர், ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களின் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்கும் இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையேயான தாக்குதல்களை துள்ளியமாக புகைப்படம் எடுத்து உலக மக்களை கவர்ந்து வந்தார்.

கடந்த 13ம் தேதி பாதுகாப்பு படையினருடன் செல்லும் போது, தலிபான்கள் தாக்குதலில் உயிர்தப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, அவர்களுடன் இருந்த சித்திகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 161

0

0