கேரள தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு ஆக. 21 வரை காவல்…! கொச்சி நீதிமன்றம் உத்தரவு

1 August 2020, 1:55 pm
swapna-nia-arrest - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, கொச்சி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளாவில் சில தினங்களுக்கு முன் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த சம்பவத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்வப்னாவின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிந்தது.

இதையடுத்து, அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவரிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சியில் விற்க முயன்றது தெரிய வந்தது. முன்னதாக தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது குற்றச்சாட்டுகள் உறுதியாகின.

அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அதில் பல முக்கிய விஷயங்கள் தெரிய வந்துள்ளதாகவும், அவர் தொடர்ந்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Views: - 39

0

0