அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா பெயர் : மறைந்தும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை..!

11 September 2020, 6:35 pm
Quick Share

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள விண்கலம் ஒன்றுக்கு கல்பனா சாவ்லா பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்கலத்தின் மூலம் கடந்த 1997-ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்று திரும்பும் வழியில், விண்கலம் வெடித்ததில் உயிரிழந்தார்.

விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ள கல்பனா சாவ்லா, ஏராளமான விண்வெளி வீராங்கனைகள் உருவாக முன்னோடியாக அமைந்தார். அவரது இறப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறைக்கே பெரும் இழப்பாக கருதப்பட்டடது.

உலக நாடுகள் அவரை புகழலின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த சூழலில், அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள விண்கலம் ஒன்றுக்கு “கல்பனா சாவ்லா” -வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள அந்த விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டதில் பெருமை கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்ணில் இருந்து மறைந்த பின்பும் வாழும் ஆற்றல் ஒருவர் வாழ்ந்த வாழ்கையின் சாதனைகளில் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை இந்தியாவின் பெருமை மிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உறுதி செய்துள்ளார்.

Views: - 0

0

0