கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் சம்மன்..!!

3 November 2020, 5:05 pm
kangana-rangoli-new - updatenews360
Quick Share

இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சான்டல் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

சமூக வலைதள பதிவுகள் வாயிலாக மதரீதியில் இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சான்டல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், 2 பேர் மீதும் வழக்குப்பதிய உத்தரவிட்டது.

2 பேர் மீதும் மும்பை போலீசார் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, வரும் 10ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Views: - 21

0

0