பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட்..! காரணம் இது தானா..?

4 May 2021, 1:29 pm
Kangana_Ranaut_UpdateNews360
Quick Share

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் தனது கணக்கு இடைநீக்கம் செய்யும் முன்பு அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து ட்வீட் செய்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறைகளுக்கு நடிகை கங்கனா ரனவத் காட்டமாக பதிலளித்திருந்தார்.

கங்கனாவின் இந்த ட்வீட்கள் ட்விட்டரின் விதிகளை மீறியதாகக் கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) வெற்றி பெற்றதையடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடிகை கங்கனா ரனவத் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற 292 இடங்களில் 212 இடங்களை ஆளும் டி.எம்.சி வென்றுள்ளது. பாஜக பிரதான எதிர்க்கட்சியாக 77 இடங்களைக் கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மே 5 புதன்கிழமை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்க உள்ளார்.

கங்கனா நடித்துள்ள தலைவி படம் விரைவில் வெளியாக உள்ளது. அதில் அவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இது ஏப்ரல் 23 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை எழுந்ததால், படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக தொடர்ந்து அரசியல் பேசி வரும் கங்கனா ரனவத் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 128

0

0

Leave a Reply