ஒடிசா முதலமைச்சரை சந்தித்த கனிமொழி எம்.பி., : நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு தர கோரிக்கை

Author: Udhayakumar Raman
13 October 2021, 8:03 pm
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவுக் கோரி ஓடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கனிமொழி எம்பி சந்தித்து பேசினார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு நின்று விடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார். அந்த வகையில் ஓடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை திமுக மகளிர் அணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மொழி பெயர்க்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த அறிக்கையையும் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.

Views: - 123

0

0